Home » உலகச் செய்திகள் » பொலிவியாவில் காட்டுத் தீ - கட்டுப்படுத்த போராடிவரும் தீயணைப்பு வீரர்கள்

பொலிவியாவில் காட்டுத் தீ - கட்டுப்படுத்த போராடிவரும் தீயணைப்பு வீரர்கள்

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு காட்டுத் தீயினால் அழிந்து போயுள்ளன.

👤 Sivasankaran2 Oct 2019 5:02 PM GMT
பொலிவியாவில் காட்டுத் தீ  - கட்டுப்படுத்த போராடிவரும் தீயணைப்பு வீரர்கள்
Share Post

பொலிவியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்திருப்பதாக ஏ.எப்.பி செய்தி சேவை தெரிவித்துள்ளது.

குறிப்பாக சிறுத்தைகள், கரும்புலிகள், காட்டுப் பூனைகள் மற்றும் தேவாங்கு போன்ற விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் பெரும் வனாந்தரங்கள் மற்றும் புற்தரைகள் உள்ளடங்களாக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு காட்டுத் தீயினால் அழிந்து போயுள்ளன.

பொலிவியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் அந்த நாட்டு தீயணைப்பு படை வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.