Home » உலகச் செய்திகள் » கடுமையான பணப்பற்றாக்குறையில் ஐநா சபை - அன்டோனியோ குட்ரெஸ்

கடுமையான பணப்பற்றாக்குறையில் ஐநா சபை - அன்டோனியோ குட்ரெஸ்

உத்தியோகபூர்வ பயணத்தை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே மேற்கொள்வது என முடிவு எடுத்துள்ளதாக கூறினார்.

👤 Sivasankaran8 Oct 2019 11:37 AM GMT
கடுமையான பணப்பற்றாக்குறையில் ஐநா சபை - அன்டோனியோ குட்ரெஸ்
Share Post

ஐக்கிய நாடுகள் சபை 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் நடத்தப்பட்டு வருவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் அக்டோபர் இறுதிக்குள் பணம் இல்லாமல் போகக்கூடும் என கூறி உள்ளார்.

2019 ஆம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவீதத்தை மட்டுமே உறுப்பு நாடுகள் வழங்கி உள்ளன. இது செப்டம்பர் மாத இறுதியில் 230 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறையாக உள்ளது. எங்கள் பணப்புழக்க இருப்புக்களை மாத இறுதிக்குள் குறைக்கும் அபாயத்தை நாங்கள் உணருகிறோம். எங்கள் நிதி ஆரோக்கியத்திற்கான இறுதி பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் உள்ளது என்றார்.

செலவுகளைக் குறைக்க, மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ள இருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். அதே நேரத்தில் உத்தியோகபூர்வ பயணத்தை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே மேற்கொள்வது என முடிவு எடுத்துள்ளதாக கூறினார்.

குட்ரெஸ் ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.