Home » உலகச் செய்திகள் » சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை - விசாரணை அறிக்கையில் தகவல்

சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை - விசாரணை அறிக்கையில் தகவல்

சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran9 Oct 2019 4:46 PM GMT
சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை - விசாரணை அறிக்கையில் தகவல்
Share Post

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை விதிகளை மீறி சசிகலா நடந்துக் கொண்டதாகவும், சிறையில் அவருக்கு விசேஷ சலுகைகள் அளிக்கப்படுவதாவும், சிறை விதிகளை மீறி அவர் வெளியே சென்று வந்ததாகவும் பரபரப்பான புகார் எழுந்தது.

இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார். இந்த புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை கர்நாடக அரசு நியமித்தது. அந்த குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து விதிகளைமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மைதான் என்றும் அந்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.