Home » உலகச் செய்திகள் » சீன அதிபர் ஜின்பிங் - இம்ரான்கான் சந்திப்பு

சீன அதிபர் ஜின்பிங் - இம்ரான்கான் சந்திப்பு

பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

👤 Sivasankaran9 Oct 2019 4:57 PM GMT
சீன அதிபர் ஜின்பிங் - இம்ரான்கான் சந்திப்பு
Share Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றார். விமானம் மூலம் பீஜிங் சென்றடைந்த அவரை சீன கலாசார துறை மந்திரி லுவோ ஷூகாங் மற்றும் பாகிஸ்தானுக்கான சீன தூதர் யா ஜிங் ஆகியோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜின்பிங் உடனான சந்திப்பின்போது வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.