மிசிசாகா பகுதியில் நெடுஞ்சாலை 401இல் பல வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தில் படுகாமடைந்த 14 வயதுடைய சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுமியும், ஆபத்து குறைவான காயங்களுக்கு உள்ளான மேலும் சிலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், வின்ஸ்டன் சேர்ச்சில் பவுல்வர்ட் பகுதியில், நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது ஆறு வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாக ஒன்ராறியோ மாநிலப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதுகுறித்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.