Home » உலகச் செய்திகள் » சுதந்திர கட்சியை சூத்திரதாரிகளிடமே ஒப்படைத்துவிட்டார்கள் - சந்திரிகா

சுதந்திர கட்சியை சூத்திரதாரிகளிடமே ஒப்படைத்துவிட்டார்கள் - சந்திரிகா

தனிப்பட்ட தேவைகளுக்காக இன்று கட்சியை மீண்டும் சூத்திரதாரிகளிடம் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran15 Oct 2019 4:47 PM GMT
சுதந்திர கட்சியை சூத்திரதாரிகளிடமே ஒப்படைத்துவிட்டார்கள் - சந்திரிகா
Share Post

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுமாறு அனைத்து சுதந்திர கட்சி உறுப்பினர்களிடமும் தான் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தற்போதைய குறுகிய நோக்குடைய தலைமைத்துவத்தின் காரணமாக கட்சி மற்றும் ஆதரவாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு 62 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொண்ட தலைவர் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக இன்று கட்சியை மீண்டும் சூத்திரதாரிகளிடம் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் நூற்றுக்கு 95 வீதமானவர்களின் எதிர்ப்பை கவனத்திற்கொள்ளாது சில சந்தர்ப்பவாத தலைவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக கட்சியை ஒப்பந்தம் ஒன்றின் மூலம் சூத்திரதாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சந்திரிகா கூறினார்.