Home » உலகச் செய்திகள் » அரச ஊடகங்கள் ஒருபக்க சார்பாக செயற்படுகின்றன - டளஸ் அழகப்பெரும

அரச ஊடகங்கள் ஒருபக்க சார்பாக செயற்படுகின்றன - டளஸ் அழகப்பெரும

கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளர் என்ற முறையில் தேர்தல் கலாசாரத்திற்கு ஒரு புதிய இலக்கணத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

👤 Sivasankaran16 Oct 2019 4:13 PM GMT
அரச ஊடகங்கள் ஒருபக்க சார்பாக செயற்படுகின்றன - டளஸ் அழகப்பெரும
Share Post

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இருப்பது 30 நாட்கள் என்றும், இன்று (16ஆம் திகதி) ​தொடங்கி 31 ஆவது நாளில் இந்நாட்டில் சூரியன் உதயமாவது புதிய தலைவர் ஒருவருடன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் இந்நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பார் என அவர் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளர் என்ற முறையில் தேர்தல் கலாசாரத்திற்கு ஒரு புதிய இலக்கணத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று (அக்டோபர், 16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஊடக சந்திப்புக்களில் கூறப்படும் விடயங்கள் அரச ஊடகங்களினால் திரிபுபடுத்தப்படுவதாக தெரிவித்தார். அரச ஊடகங்கள் ஒருபக்க சார்பான கொள்ளையை பின்பற்றி தேசிய வேட்பாளரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.