எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதாகவும் அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரதிவாதிகளுக்கு நல்ல பாடம் ஒன்றை புகட்டுவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வாரியபொல பகுதியில் நேற்று (அக்டோபர், 16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு இரும்பு போன்ற தலைமைத்துவம் வேண்டும் எனவும் அவ்வாறான தலைமைத்துவத்தை வழங்க தான் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.