நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த பெண்மணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுர்ஸ்ட் வீதி மற்றும் செப்பர்ட் அவனியூ பகுதியில், பாதுர்ஸ்ட் மனோர் குடியிருப்புப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த பெண் 70 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் குறித்த மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை. விபத்து நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.