Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற்றுக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் - பொரிஸ் ஜோன்சன்

பிரெக்ஸிற்றுக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் - பொரிஸ் ஜோன்சன்

322 பேர் ஆதரவாகவும் 306 பேர் எதிராகவும் வாக்களித்தனர்

👤 Sivasankaran21 Oct 2019 1:30 PM GMT
பிரெக்ஸிற்றுக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் - பொரிஸ் ஜோன்சன்
Share Post

அக்டோபர் 31ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுவதற்குத் தேவையான சட்டத்தை அரசாங்கம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்றும் அதற்காக காலதாமதம் கேட்கவேண்டும் என்றும் பிரெக்ஸிற் எதிர்ப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒலிவர் லெற்வின் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நேற்று முன்தினம் சனிக்கிழமை வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பின்போது 322 பேர் ஆதரவாகவும் 306 பேர் எதிராகவும் வாக்களித்தனர் இதனால் ஒலிவர் லெற்வின் முன்வைத்த திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரெக்ஸிற் காலதாமதம் கேட்கவேண்டும் என்ற இந்த வாக்கெடுப்பில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இதனால் பிரதமரின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு சனிக்கிழமை விசேடமாகக் கூட்டப்பட்ட பாராளுமன்ற அமர்வில் நடைபெறவில்லை.