கிழக்கில் நான் செய்த அபிவிருத்தியை தவிர வேறு எவரும் செய்யவில்லை - மஹிந்த
தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டுய தீபாவளி முற்கொடுப்பணவு வழங்கப்படவில்லை அதற்கு எங்களது எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.

கிழக்கில் நான் செய்த அபிவிருத்தியை தவிர வேறு எவரும் இன்று வரை செய்யவில்லை. இதனை கிழக்கு மக்கள் உணர்ந்துள்ளனர் என நினைக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவருக்கு அவரது குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டேன்.
இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேவேளை தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டுய தீபாவளி முற்கொடுப்பணவு வழங்கப்படவில்லை அதற்கு எங்களது எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இந்த தேர்தலின் போது சரியான தீர்வினை எடுக்க வேண்டும், எடுப்பார்கள் என நினைக்கின்றேன். ஏன் என்றால் இந்த அரசாங்கம், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திற்கும் ஒன்று செய்யவில்லை நாட்டுக்கும் செய்யவில்லை, நாட்டுக்கு நான் செய்ததைவிட எதுவும் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.