கோமோகாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்
இருவரும் தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
👤 Sivasankaran28 Oct 2019 3:37 PM GMT

ஒன்ராறியோவின் கோமோகா மேற்கு பகுதியில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஒரு இளைஞன் உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமைடந்துள்ளதாக ஸ்ட்ராத்ரோய்-கராடோக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிடில்செக்ஸ் மத்தியைச் சேர்ந்த 18 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார், அடையாளம் கண்டுள்ளனர். காயமடைந்த இருவரும் தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், மற்ற வாகனத்தின் ஓட்டுநருக்கு லேசான காயங்கள் இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire