பதவி விலக மாட்டேன் - இம்ரான் கான்
எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளில் இம்ரான் கானின் ராஜினாமா மற்றும் மறு தேர்தலை முக்கியக் கோரிக்கையாக முன் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக ஜாமியக் உலேமா-இ- இஸ்லாம் பசல் (ஜே.யு.ஐ.-எப்) கட்சி தலைவரும், மதகுருவுமான மவுலானா பஷ்லூர் ரஹ்மான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார்.
திறமையின்மை, மோசமான நிர்வாகம் காரணமாக மக்களின் கஷ்டம் அதிகரித்துவிட்டது. அவர் தொடர்ந்து பதவியில் நீடித்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும். எனவே அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டுமென்று போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இம்ரான் கான் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் எதிர்க்கட்சிகளின் ராஜினாமா கோரிக்கையைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளில் இம்ரான் கானின் ராஜினாமா மற்றும் மறு தேர்தலை முக்கியக் கோரிக்கையாக முன் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.