முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பிணையாளர் அற்ற கடன் - சஜித்
அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று (நவம்பர், 7) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனை கூறினார்.
👤 Sivasankaran8 Nov 2019 2:10 PM GMT

சிறு பயிர் ஏற்றுமதியாளர்களை மேம்படுத்துவதற்காக சிறு பயிர் ஏற்றுமதி அதிகார சபை ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று (நவம்பர், 7) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனை கூறினார்.
"ஒன்றிணைந்து முன்னோக்கி" என்ற தொனிப்பொருளிலான இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, தான் ஜனாதிபதியானதும் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு சீருடைகளை வழங்குவதாகவும், ஒரு ஜோடி பாதணி மற்றும் இலவசமாக மதிய உணவை கட்டாயம் வழங்குவதாகவும் கூறினார்.
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மூன்று இலட்சம் வரையிலான பிணையாளர் அற்ற கடன்களை வழங்குவதாகவும், அது அவர்களுக்கு தொழில்ரீதியாக மிகுந்த சக்தியாக அமையும் என்றும் கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire