சர்ரே பகுதியில் துப்பாக்கி சூடு - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
குவாண்ட்லன் பார்க் மேல்நிலைப்பள்ளிக்கு அருகிலேயே குறித்த நபர், இலக்கு வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
👤 Sivasankaran11 Nov 2019 12:46 PM GMT

சர்ரே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 104 அவென்யூவின் 13200 தொகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குவாண்ட்லன் பார்க் மேல்நிலைப்பள்ளிக்கு அருகிலேயே குறித்த நபர், இலக்கு வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, குறித்த நபர் உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும் பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire