இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
உயிரிழந்தவரின் விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியிடாத பொலிஸார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
👤 Sivasankaran29 Nov 2019 3:22 PM GMT

ரொறன்ரோ- மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்க்ரீக் ட்ரைவ் மற்றும் எரின் மில்ஸ் பார்க்வே பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு முன்னதாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.
லொறி மற்றும் ட்ரக் வாகனங்களே இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற பின்னர், லொறி சாரதி சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து எவ்வாறு நிகழ்ந்தது மற்றும் உயிரிழந்தவரின் விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire