எதிர்கட்சித் தலைவர் பதவி சஜித்திற்கு - மனோ கணேசன்
சபாநாயகர் கரு ஜயசூரியவும் எதிர்க் கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க உடன்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் சஜித் பிரேமதாச எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கவின் தலைமை பதவி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி ஆகியன தற்போது அரசியல் பேசு பொருளாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்க் கட்சி தலைவர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரியவும் எதிர்க் கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க உடன்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் எதிர்க் கட்சி பதவி வழங்கப்படுவது குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த பதவி தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடி அறிவிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.