எதிர்வரும் ஜனவரி முதல் நேரடி வரியும் குறைக்கப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல்ல குணவர்தன தெரிவித்துள்ளார். ஏற்கனவே மறைமுக வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத சாதாரண வரித் திட்டத்தை செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக அறவிடப்பட்டுவந்த அனைத்து வரி அறவீடுகளும் சலுகை திட்டத்திற்கமைய இன்று முதல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் என்றும் கூறினார்.