ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - கமலா ஹாரீஸ்
பிரச்சாரத்தை தொடர்ந்திட போதுமான நிதி ஆதாரம் இல்லை.
👤 Sivasankaran4 Dec 2019 2:28 PM GMT

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரீஸ், டிரம்பின் கொள்கைகளை தைரியமாக எதிர்த்தும், விமர்சித்தும் வருகிறார்.
டிரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, வரிவிதிப்புக் கொள்கை, மெக்சிகோ சுவர் விவகாரம் போன்றவற்றை செனட் சபையில் எதிர்த்து குரல் கொடுத்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். எனது பிரச்சாரத்தை தொடர்ந்திட போதுமான நிதி ஆதாரம் இல்லை. எனவே தான் விலகுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire