தென்கிழக்கு கல்கரியின் அப்பிள்வூட் பகுதியில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அப்பிள்வூட் டிரைவ் எஸ்.இ. மற்றும் 68 வீதி எஸ்.இ. பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஒரு வாகனத்தின் சாரதி, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டதாக மருத்துவப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு வாகனத்தின் சாரதி, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.