Home » உலகச் செய்திகள் » சீரற்ற காலநிலை - வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் அவதி

சீரற்ற காலநிலை - வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் அவதி

நீர்த்தேகத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

👤 Sivasankaran8 Dec 2019 6:08 AM GMT
சீரற்ற காலநிலை - வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் அவதி
Share Post

சிறலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 70 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீரற்ற காலநிலையினால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

90 நலன்புரி முகாம்களில் 2 ஆயிரத்து 609 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 556 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, நீர்த்தேகத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் 483 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.