நாட்டை முன்னேற்றுவதற்காக புதிய அரசாங்கத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு, பெத்தாராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று மூன்று வாரங்கள் ஆகின்றது. அவர் பெரும் வெற்றியை பெற்றுக் கொண்டார். நாட்டிற்கு புதிய தலைவர் கிடைத்தால் அந்த புதிய அரசாங்கத்திற்கும் தலைவருக்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாட்டில் இருக்கும் பிரதான பிரச்சினை வறுமை. அதனால் புதிய அரசாங்கம் நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றும் பேசினார்.