வட கொரியாவினுடைய இராணுவ பலத்தினை அதிகரிக்கும் நோக்குடன் வட கோரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், அந்நாட்டு இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா-அமெரிக்கா இடையே மோதல் நிலை மீண்டும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியாவுடன் சமரசம் செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்திருந்தது.
சிங்கப்பூரில் நடந்த வரலாற்று உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் செய்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலக்கு தங்களிடம் உள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
எனினும் பொருளாதாரத் தடைகளை விலக்கும் வரை அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று வடகொரியா அண்மையில் அறிவித்திருந்தது. அத்துடன் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளையும் வடகொரியா மேற்கொண்டு வருகிறது.