ஸ்கார்பரோவில் விபத்து - இருவர் உயிரிழப்பு
காயமடைந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
👤 Sivasankaran23 Dec 2019 3:45 PM GMT

ஸ்கார்பரோவில் நடந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்கம் வீதி மற்றும் புரோகிரஸ் அவென்யூ பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6:30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்திற்கு அதிவேகமே பயணித்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் என பொலிஸாரின் அறிக்கை தெரிவிக்கின்றது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire