மிசிசாகாவில் இருவருக்கிடையில் மோதம் - இருவரும் உயிரிழப்பு
குறித்த இருவரும் முன்னரே பழக்கமானவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
👤 Sivasankaran29 Dec 2019 3:15 PM GMT

மிசிசாகாவில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவரும் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிசிசாகாவின் கிளென் எரின் டிரைவ் மற்றும் தி கொலேஜ்வே பகுதியில் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் ஏற்பட்ட மோதலில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். மற்றையவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.நேற்று இடம்பெற்ற நிலையில், 28 வயதுடைய இளைஞனும் 44 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் முன்னரே பழக்கமானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இதுவொரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும் இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire