புத்தாண்டு தினத்தில் ரொறன்ரோவில் துப்பாக்கி சூடு - இருவர் உயிரிழப்பு
துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
👤 Sivasankaran2 Jan 2020 3:30 PM GMT

ரொறன்ரோ – ரிவர் வீதி மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதியில், நேற்று (புதன்கிழமை) இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.
தவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, இருவர் உயிராபத்தான படுகாயங்களுடன் இருந்தாகவும், பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, அவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், உயிரிழந்தவர்கள் ஆண், பெண்ணா? அவர்களது வயது உள்ளிட்ட எவ்வித தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.
மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த இடம் எங்குள்ளது என்பது குறித்து மேலதிக விபரங்களை அவர்கள் வழங்கவில்லை.
ஆனால் சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அதிகாரிகள் அந்தப் பகுதியைத் தேடி வருவதாகவும் கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire