தொழில்துறை கட்டிடத்தில் தீ விபத்து - ஒருவர் படுகாயம்!
42வது வீதி எஸ்.இ.யின் 6400 தொகுதிகளில் அமைந்துள்ள கட்டிடத்திலேயே நேற்று காலை 9:40 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
👤 Sivasankaran3 Jan 2020 3:30 PM GMT

தென்கிழக்கு கல்கரியில் உள்ள தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
42ஆவது வீதி எஸ்.இ.யின் 6400 தொகுதிகளில் அமைந்துள்ள கட்டிடத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) காலை 9:40 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
கல்கரி தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, தீ சுவர் மற்றும் கூரைக்குள் பயணிக்கத் தொடங்கியிருந்ததாகவும், இதன்போது ஆறு பேர் வெளியேற்றப்பட்டு, ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இயந்திர வேலைகளின் விளைவாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire