Home » உலகச் செய்திகள் » ஆஸ்திரேலியா காட்டுத்தீ - சிக்கி தவிக்கும் விலங்குகள்

ஆஸ்திரேலியா காட்டுத்தீ - சிக்கி தவிக்கும் விலங்குகள்

இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

👤 Sivasankaran5 Jan 2020 4:40 PM GMT
ஆஸ்திரேலியா காட்டுத்தீ - சிக்கி தவிக்கும் விலங்குகள்
Share Post

ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா, நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகிற பகுதிகளில் வசிக்கும் சுமார் 1 லட்சம் பேர், வீடுகளை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை காட்டுத்தீயில் 25 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எங்கு பார்த்தாலும் தீ பிழம்புகள், உயிரை பிடித்துக்கொண்டு தப்பிக்கும் உயிரினங்கள், தாகத்துக்காக ஏக்கத்துடன் மனிதனை எதிர்நோக்கும் கோலா கரடிகள், குட்டிகளை தன் பையில் பத்திரப்படுத்தி தாவி குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கங்காருகள் என ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகள் காட்டுத் தீயால் பெரியளவில் நாசம் அடைந்து வருகிறது.

இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கரடி இனங்களில் அழகானதாக கருதப்படும் கோலா கரடிகள் காட்டு தீயால் பெரிய துன்பத்தை அனுபவிக்கிறது. கங்காரு, பறவைக் கூட்டங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல விலங்கியல் ஆர்வலர்கள் ஆஸ்திரேலிய காடுகளின் நிலையை எண்ணி கவலை தெரிவித்துள்ளனர்.