ஓட்டாவாவில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு
படுகாயங்களுடன் காணப்பட்ட மற்றொருவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மத்திய ஒட்டாவாவின் மேற்கே அடுக்குமாடி கட்டடமொன்றில் நடந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டானியா பூங்காவின் கிழக்கு எல்லையின் ஜெஃபிர் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி கட்டடமொன்றில் இன்று (ஜுன், 10) அதிகாலை 2.50 மணியளவில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.
இந்த தீ விபத்து பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் உணர்வற்ற நிலையில் ஒருவரை கண்டுள்ளனர். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதனை பின்னர் உறுதி செய்தனர். படுகாயங்களுடன் காணப்பட்ட மற்றொருவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர் மற்றும் படுகாயமடைந்தவரின் வயது மற்றும் பாலினம் வெளியிடப்படவில்லை. இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து இன்னமும் காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.