ரொறன்ரோ- பிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஃபயர்சைட் ட்ரைவ் மற்றும் நேவி கிரசண்ட் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பெண்ணொருவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
அந்த பெண் தொடர்பாகவோ அல்லது இந்த தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பாகவோ பொலிஸார் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.