வின்னிபெக் பகுதியில் தீ விபத்து - இருவர் மருத்துவமனையில் அனுமதி
தீயணைப்பு படையினர் சில மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
👤 Sivasankaran16 Jan 2020 3:45 PM GMT

வின்னிபெக் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள மருத்துவபிரிவினர், அவர்களை தொடர்ந்து அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சுகாதார அறிவியல் மையத்திலிருந்து சில தொகுதிகள் தொலைவில் உள்ள மெக்டெர்மொட் அவென்யூவில் உள்ள வீடொன்றில் நேற்று (புதன்கிழமை) இரவு 7.30 மணியளவில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சில மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீட்டிலுள்ள மற்ற குடியிருப்பாளர்கள் அனைவரும் தாங்களாகவே தப்பி விட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire