தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீருமே முக்கியமானவை என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து தெரிவித்துள்ளார். இது முழுத் தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என்று வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக சோற்றுக்கும், தண்ணீருக்கும் போராடவில்லை. அரசாங்கத்தின் பொருளாதார தடை இருந்த காலத்திலும் தமிழர்கள் இந்த மண்ணில் வாழ்த்தவர்கள்.
மானமுள்ள தமிழன் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும் சோறும் தண்ணீரும் முக்கியமென்று கூற மாட்டான் என்று சி.வி.கே.சிவஞானம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.