Home » உலகச் செய்திகள் » ரஜினிகாந்த் சிறிலங்கா வரலாம் - நாமல் ராஜபக்சே

ரஜினிகாந்த் சிறிலங்கா வரலாம் - நாமல் ராஜபக்சே

“நானும், எனது தந்தையும் கூட ரஜினி ரசிகர்கள்” - நாமல்

👤 Sivasankaran18 Jan 2020 2:43 PM GMT
ரஜினிகாந்த் சிறிலங்கா வரலாம் - நாமல் ராஜபக்சே
Share Post

நடிகர் ரஜினிகாந்த் சிறிலங்கா வர எந்த தடையும் இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் சந்திப்பின் பின்னர் ரஜினிகாந்த் சிறிலங்கா வர விரும்பியதாகவும், அவருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

அந்த செய்தி உண்மையில்லை என்றும், "நானும், எனது தந்தையும் கூட ரஜினி ரசிகர்கள்" என நாமல் தெரிவித்துள்ளார்.