Home » உலகச் செய்திகள் » ரணிலை விட்டு கழன்ற கூட்டணி கட்சிகள் - சஜித்துடன் புதிய கூட்டணி

ரணிலை விட்டு கழன்ற கூட்டணி கட்சிகள் - சஜித்துடன் புதிய கூட்டணி

சஜித் பிரேமதாஸ ஆதரவு அணியினர் முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran18 Jan 2020 3:33 PM GMT
ரணிலை விட்டு கழன்ற கூட்டணி கட்சிகள் - சஜித்துடன் புதிய கூட்டணி
Share Post

நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமையில், போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்காக காத்திருக்காமல் பரந்துப்பட்ட கூட்டணி ஒன்றை உருவாக்க சஜித் பிரேமதாஸ ஆதரவு அணியினர் முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.