சிறிலங்கா ராணுவத்துக்கு இந்தியா நிதி உதவி - ராமதாஸ் கண்டனம்
இந்தியா கொடுக்கும் நிதியை பயன்படுத்தி ஈழத்தமிழர்களை சிங்கள அரசு ஒடுக்கக்கூடும்

சிறிலங்கா ராணுவத்துக்கு இந்தியா 50 மில்லியன் டாலர் நிதி தருவது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் என்றும், இது கண்டனத்திற்குரியது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்தியா கொடுக்கும் நிதியை பயன்படுத்தி ஈழத்தமிழர்களை சிங்கள அரசு ஒடுக்கக்கூடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிற்கு இந்தியா நிதி உதவி செய்யக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈழத்தமிழர்கள் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு கொடுத்த உறுதிமொழியை சிறிலங்கா அரசு காப்பற்றவில்லை என்றும், இந்த சூழலில் இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன? என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் சிறிலங்கா அரசு தண்டிக்கப்பட வேண்டிய இடத்தில் இருப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார். ஒடுக்கும் இந்தியாவிடம் இருந்து பெறும் நிதியை கொண்டு ஈழத்தமிழர்களை தான் சிங்கள அரசு ஒடுக்கும் என்றும், இதனால் சிறிலங்காவிற்கு எந்த நிதி உதவியும் இந்திய அரசு செய்யக்கூடாது என்றும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.