சரணடைந்தவர்களே பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டனர் - சிறிதரன்
இது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
👤 Sivasankaran22 Jan 2020 12:53 PM GMT

இறுதிப்போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது இதை தெரிவித்தார்.
போரின் இறுதி கட்டங்களில் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் இராணுவத்திடம் சரணடைந்தனர். எனவே பொறுப்புக்கூறலையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும். இறுதிப் போரின்போது பலர் இராணுவத்தில் சரணடைந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விவகாரங்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் முறையான தீர்வொன்று கிடைக்கப்படாவிட்டால், உலகில் நிராகரிக்கப்பட்ட இனமாக தமிழினம் மாற்றமடையும் என்று சிறிதரன் கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire