தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து அவர் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் சிறிலங்கா பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.