Home » உலகச் செய்திகள் » சீனா, பாகிஸ்தானின் நல்ல நண்பன் - இம்ரான்

சீனா, பாகிஸ்தானின் நல்ல நண்பன் - இம்ரான்

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

👤 Sivasankaran24 Jan 2020 1:34 PM GMT
சீனா, பாகிஸ்தானின் நல்ல நண்பன் - இம்ரான்
Share Post

சீனாவில் துன்புறுத்தப்படும் உய்குர் முஸ்லிம்கள் பற்றி எனக்கு தெரியாது என்றும், கடினமான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா உதவியது என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்த போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தன்னை காஷ்மீர் மக்களின் தூதர் என்றும் கூறிக்கொண்டார். அதேபோல் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதால், இங்குள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்து வந்தார்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மீது அக்கறை இருப்பது போலவும், அவர்களுக்காக குரல் கொடுப்பது போலவும் பாசாங்கு செய்து வந்தார். இதற்கிடையே சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக இம்ரானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

சீனாவில் முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது பற்றி எப்போதோ படித்துள்ளேன். ஆனால், காஷ்மீரில் நடப்பதை ஒப்பிடும் போது அதெல்லாம் ஒன்றுமில்லை.

சீனா, பாகிஸ்தானின் நல்ல நண்பன். எங்களது கடினமான சூழ்நிலைகளில் சீனா எங்களுக்கு உதவியுள்ளது. சீனாவுடன் எங்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தீர்த்துக்கொள்வோம்; பொதுவெளியில் சொல்ல மாட்டோம். என்று இம்ரான் கூறினார்.