Home » உலகச் செய்திகள் » பிரெக்சிட் - இன்று வெளியேறுகிறது இங்கிலாந்து

பிரெக்சிட் - இன்று வெளியேறுகிறது இங்கிலாந்து

இங்கிலாந்தின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இழக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

👤 Sivasankaran31 Jan 2020 1:45 PM GMT
பிரெக்சிட் - இன்று வெளியேறுகிறது இங்கிலாந்து
Share Post

இங்கிலாந்து உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11:00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது. பிரெக்சிட் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 11 மாத நிலைமாற்ற காலம் உள்ளமையால், பெரும்பாலான விடயங்கள் அப்படியே இருக்கும் என்றும் சில மாற்றங்கள் மட்டும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்தின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இழக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெக்சிட் தருணத்தில் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து அரசியல் நிறுவனங்களையும் அமைப்புக்களையும் விட்டு வெளியேறும்.

எவ்வாறாயினும், நிலைமாற்றக் காலத்தில் ஐரோப்பிய நீதிமன்ற விதிகளை இங்கிலாந்து பின்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் உச்சி மாநாட்டில் ஏனைய தலைவர்களுடன் சேர விரும்பினால், இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பாக அழைக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.