காட்டுத்தீ - கான்பராவில் அவசர நிலை அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின், கான்பராவிற்கு தெற்கே மிகப்பெரியளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள்...

ஆஸ்திரேலியாவின், கான்பராவிற்கு தெற்கே மிகப்பெரியளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசர நிலையை அறிவித்துள்ளனர்.
கான்பராவில் கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான காட்டுத்தீயாக இதனை தெரிவித்துள்ளனர். இதனால் கான்பராவின் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றம் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிட்னிக்கும் மெல்போர்னுக்கும் இடையில் அமைந்துள்ள இந்ச் சிறிய பகுதியில் ஏறத்தாழ 4,00,000 குடியிருப்பாளர்கள் வாழ்கின்றனர்.
ஆஸ்திரேலியா கடந்த செப்டெம்பர் மாதம் முதல் காட்டுத் தீக்கு இலக்காகி உள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.