Home » உலகச் செய்திகள் » சீனாவுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.

👤 Sivasankaran1 Feb 2020 1:10 PM GMT
சீனாவுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை
Share Post

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேபோல வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளவர்களின் எண்ணிக்கையும் 9,692 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.

உலக சுகாதார நிறுவன தலைவர் கேப்ரியேசஸ் கூறும்போது, "குறைவான சுகாதார வசதிகள் உள்ள நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது என்பதே எங்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது" என்றார்.

அமெரிக்கா தனது குடிமக்களை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இதுதொடர்பாக 4-ம் நிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கர்கள் சீனாவுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சீனாவில் இப்போது இருக்கும் எந்த நாட்டை சேர்ந்தவர்களும் வர்த்தக விமானத்தில் புறப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.