சிறிலங்காவின் சுதந்திர தின நிகழ்வில் இம்முறை சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம். தமிழ் மொழி தேசிய மொழி. அது அரச கரும மொழி. எனவே, சிங்களத்துடன் தமிழிலும் தேசிய கீதம் பாடுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? என்ன முரண்பாடு இருக்கின்றது? சுதந்திர தினத்தில் கட்டாயம் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்.
தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலும் தமிழ் மொழியை அவமதிக்கின்ற வகையிலும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு கோட்டாபய அரசு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் அது நாட்டின் நல்லிக்கணத்துக்குப் பாதகமாக அமையும் மீண்டும் ஒரு தனி நாட்டுப் போருக்கே வழிவகுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.