Home » உலகச் செய்திகள் » மீண்டும் இனவாத அரசியலைச் செய்கின்றனர் - சம்பிக்க ரணவக்க

மீண்டும் இனவாத அரசியலைச் செய்கின்றனர் - சம்பிக்க ரணவக்க

சிங்கள மக்களைத் தம் வசம் வைத்திருக்கச் செய்யும் சூழ்ச்சியாகவுமே நாம் கருதுகின்றோம்.

👤 Sivasankaran3 Feb 2020 3:32 PM GMT
மீண்டும் இனவாத அரசியலைச் செய்கின்றனர் - சம்பிக்க ரணவக்க
Share Post

தற்போதை அரசாங்கம் இனவாதக் கருத்துக்களை மட்டுமே பரப்பி வருகின்றது. சகல மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை நாம் அமைத்துக் கொடுத்தோம். ஆனால் ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் இனவாத அரசியலைச் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சிறிலங்காவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்படக் கூடாது என அறிவித்துள்ளனர். ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு எந்தவொரு தடையையும் நாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செய்யவில்லை.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வேண்டாம் என அரசாங்கம் கூறுகின்றது என்றால் அது வெறுமனே தமது வெற்றியை தக்கவைத்துக்கொள்ளவும் சிங்கள மக்களைத் தம் வசம் வைத்திருக்கச் செய்யும் சூழ்ச்சியாகவுமே நாம் கருதுகின்றோம்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை ராஜபக்ஷ அரசாங்கம் தடுப்பது தமிழ் மக்களின் கடந்தகால சூழலை மீண்டும் நினைவுபடுத்தவா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.