Home » உலகச் செய்திகள் » சிறிலங்கா சுதந்திர தினம் - பறக்குது கறுப்பு கொடிகள்

சிறிலங்கா சுதந்திர தினம் - பறக்குது கறுப்பு கொடிகள்

சுதந்திர தினத்தினை கருப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரியிருந்தனர்.

👤 Sivasankaran4 Feb 2020 3:09 PM GMT
சிறிலங்கா சுதந்திர தினம் - பறக்குது கறுப்பு கொடிகள்
Share Post

சிறிலங்காவின் 72வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன.

மேலும், பதாதை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டது. அதில் "ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் ஊடாகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் வேண்டும். கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சுதந்திர தினத்தினை கருப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரியிருந்தனர். அத்துடன் இன்றைய தினம் போராட்டங்களையும் நடத்தினர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இன்றைய தினம் காலை முதல் மாணவர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வளாக வாயில்கள் பூட்டப்பட்டிருந்தன.