சிறிலங்கா சுதந்திர தினம் - தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை
சிங்களத்தில் மட்டுமே பாடப்பட்டது.
👤 Sivasankaran4 Feb 2020 3:56 PM GMT

சிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றிருந்தது. அப்போது காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தமிழில் மட்டும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிறிலங்காவின் வடபகுதியில் சேவையாற்றுவதற்காக 2000 தமிழ்க் காவல்துறையினர் அமர்த்தப்படவுள்ளனர்.
அதில், வடபகுதியில் சேவையாற்றுவதற்காக தமிழர்கள் காவல்துறையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை. சிங்களத்தில் மட்டுமே பாடப்பட்டது. கடந்த மைத்திரிபால சிறிசேன – ரணில் ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் பாடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire