Home » உலகச் செய்திகள் » கொரோனா வைரஸ் - வதந்திகளை நம்ப வேண்டாம்

கொரோனா வைரஸ் - வதந்திகளை நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran6 Feb 2020 10:56 AM GMT
கொரோனா வைரஸ் - வதந்திகளை நம்ப வேண்டாம்
Share Post

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. மருந்து கண்டுப்பிடித்திருப்பதாக யாராவது கூறினால் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தேனாம்பேட்டை டிஎம்எஸ் கூட்ட அரங்கில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பீலா ராஜேஷ் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 12 பேர் வீட்டிற்கு திரும்பியுள்ளதாகவும், 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.