Home » உலகச் செய்திகள் » இந்தியாவின் உதவி இல்லாமல் போரை நிறைவு செய்திருக்க முடியாது- மஹிந்த

இந்தியாவின் உதவி இல்லாமல் போரை நிறைவு செய்திருக்க முடியாது- மஹிந்த

அந்த நாட்களில் இந்தியா தாம் வழங்கிய உதவிகளை வெளிப்படையாக அறிவிக்க விரும்பவில்லை.

👤 Sivasankaran9 Feb 2020 2:03 PM GMT
இந்தியாவின் உதவி இல்லாமல் போரை நிறைவு செய்திருக்க முடியாது- மஹிந்த
Share Post

"விடுதலை புலிகள் இயக்கத்தை அழிக்க இந்தியா பெரும் உதவிகளை வழங்கி உள்ளது. அதாவது கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரை இந்தியாவின் உதவியின்றி எங்களால் நிறைவு செய்திருக்க முடியாது. ஆனால் அந்த நாட்களில் இந்தியா தாம் வழங்கிய உதவிகளை வெளிப்படையாக அறிவிக்க விரும்பவில்லை.

மேலும் சிறிலங்காவின் உள் விவகாரங்களில் சீனாவோ, இந்தியாவோ தலையிட்டதில்லை. யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் நாங்களே அபிவிருத்திகளை செய்தோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அதிகபடியான தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்தாலும் அதுவும் அபிவிருத்திகளை விரும்பவில்லை. மாறாக அதிகாரப்பகிர்வை கோரி தமிழர்களுக்கான தனி மாநிலத்தை உருவாக்க முயல்கிறது" என மஹிந்த ராஜபக்ஷ 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு' கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.