சஜித்தின் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது - ததேகூ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
👤 Sivasankaran25 Feb 2020 5:21 PM GMT

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என்றுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire