இராணுவ மயமாக்கப்படும் நாடு - ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் அச்சம்
எமக்கு எதிராக யாருக்கும் நடவடிக்கை எடுக்கமுடியாது போன்ற வீர வசனங்கள் தெரிவித்திருக்கின்றார்.
👤 Sivasankaran2 March 2020 4:30 PM GMT

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது நாடு இராணுவ மாயமாக்கப்படும் அச்சம் தோன்றியுள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில், இது சிங்கள நாடு. எமக்கு எதிராக யாருக்கும் நடவடிக்கை எடுக்கமுடியாது போன்ற வீர வசனங்கள் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் ஜெனிவாவில் இலங்கை பல் இன, பல்தேசிய நாடு, அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுவதாகவும் அனைவருக்கும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார். இது இவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஒன்றையும் சர்வதேசத்துக்கு வேறு ஒன்றையும் தெரிவிக்கும் நிலையே எடுத்துக்காட்டுவதாகவும் ஆசு மாரசிங்க கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire