நிா்பயா வழக்கு - குற்றவாளிகள் தூக்குத் தண்டனை மீண்டும் நிறுத்தி வைப்பு
இப்போது 3-ஆவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
👤 Sivasankaran3 March 2020 10:58 AM GMT

நிா்பயா' பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.
குற்றவாளிகள் நால்வரும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட இருந்தனா். இந்தச் சூழ்நிலையில் குற்றவாளிகளின் ஒருவரான பவன் குப்தா, குடியரசுத் தலைவருக்குத் திங்கள்கிழமை கருணை மனு ஒன்றை அனுப்பினாா்.
எனவே, அதில் முடிவு கிடைக்கும் வரை நால்வரையும் தூக்கிலிட முடியாது என்ற காரணத்தால், அடுத்த உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைப்பதாக தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தா்மேந்திர ராணா அறிவித்தாா்.
இதனால் நால்வரின் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இப்போது 3-ஆவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire